தமிழில் சிறந்ததென்று போற்றப்பெறும் பொருள் இலக்கணத்தில் ஒரு பகுதி
புறப்பொருள் இலக்கணம். புறப்பொருளின் இலக்கணத்தைச் சொல்லும் நூல் களும்
இலக்கியமாக அமைந்த பனுவல்களும் தமிழில் பல உள்ளன. புறப்பொருள்,
பெரும்பாலும் வீரத்தின் பல்வேறு நிலைகளைச் சொல்வது. முடியாட்சியிருந்த
பழங்காலத்தில் போர் நிகழ்ச்சிகள் எவ்வாறு நடந்தன என்பதும், மன்னர்கள்
படைகளைக் காப்பாற்றிப் பகை வர்களை வெல்வதற்கு என்ன என்ன வகையில் முயன்றனர்
என்பதும் போன்ற பல செய்திகளை அந் நூல்கள் காட்டுகின்றன. அவற்றிலிருந்து
தமிழ் மக்கள் உள்ளத்தே கனன்று பொங்கிய வீர உணர்வைத் தெரிந்து