சுஜாதவின் மாத நாவல் விளையாட்டுகளில் 'சிவந்த கதைகள் ' ஒன்று. மணியன் மாத இதழில் பிரசுரமானது. ஒரு மிகப்பெரிய
கார்ப்பரேட் நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் பிரிவில் வேலைக்கு நுழையும் இளைஞனொருவன் எளதில் அடைய முடியாத உச்சபட்ச பதவியை நோக்கி முன்னேறுகிறான். துரதிருஷ்டவசமாக அவன் மறைத்து வைத்திருக்கும் ஒரு சின்னக் களங்கம் அவனது லட்சியத்துக்கு முட்டுக்கட்டையாக வர நேரும்போது - திடுக்கென அவன் தேர்ந்தெடுக்கும் வழிமுறை செயல்பாடு, பிராயச்சித்தம் என சுனாமிவேக சுழல் கதை. எவ்வளவோ மேடு பள்ளங்கள், சறுக்கல், சதிகள், எதிர்பாராதவைகள் நிகழலாம். நீ இதை எதிர்பார்த்திருக்க வேண்டும். விக்ரம், உன் குறிக்கோள் இவள் அல்ல. எப்படியாவது ஆறு மாதத்தில் அந்த நாற்காலியை அடை. அது தான் சிகரம். பெண் என்பவள் அசோக் சொன்னது போல ஒரு அநாவசியக்குறுக்கீடு.
- சுஜாதா .