எம்.ஜி.ஆர்.- இந்த மூன்றெழுத்துக்குள்ள காந்தசக்தி எத்தகையது என்று தமிழகம் யாரும் சொல்லாமே உணர்ந்த ஒன்று. தமிழகத்தின் ஏழை மக்கள் துயர்மிகுதியால் வெதும்பி மனம் நைகிற போதெல்லாம் அந்த மகராசனை மட்டும் பாத்துட்டா என்
கஷ்டமெல்லாம் போயிடும். என்று நம்பிக்கை நாளங்களை நிரப்புகிற தமிழ் மக்களின் நம்பிக்கையாய் வாழ்ந்தனர். மறைந்த பின்னாலும், மறக்க முடியாத மாமனிதராய் தமிழ் மக்கள் நினைவிலே நிற்கிற எம்.ஜி.ஆர். என்ற பிம்பம் தனி மனிதப் போராட்டங்களுக்கு ஒரு தன்னம்பிக்கைத் தொடர். மனிதநேயத்துக்கு மறுதலிக்க முடியாத உதாரண புருஷர் இதயம் பேசுகிறது. உதயமானதில் பெரும் பங்கு வகித்தவர். இன்னமும் அவரைப் பற்றிச் சொல்லியபடியே இருக்கும் மனிதர்கள் ஏராளம். அத்தகைய ஒரு மாமனிதனின் சில பக்கங்கள் தான். இந்த , மறக்க முடியாத மாமனிதர் -எம்.ஜி.ஆர். நூலில் மணவை பொன்மாணிக்கம் பதிவு செய்திருக்கிறார். எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். என்ற தலைப்பில் சிறப்பானதொரு தொடரை பாக்யா வார இதழில் எழுதிய நண்பர் மணவை பொன்.மாணிக்கம் திரட்டிய அரிய தகவல்களின் தொகுப்பு இது. படித்தால் பரவசம் , உணர்ந்தால் ஊக்கம்.