அறிவியல் பூர்வமான செய்திகளைக்குழந்தைகள் அறிந்துகொள்ள முன்வரவேண்டும். அந்த வகையில் அவர்களுக்கு ஏற்ற புத்தகங்களாக '' ரினோ'' - வின் மூன்று பாகங்களும் மிக அழகாகவும், ஆழமான கருத்துக்களைக்கொண்டும் அமைந்துள்ளன. இதுவரை வெளிவராத புதிய கதைக் களமும், விந்தை மிகு விஞ்ஞான அதிசங்களும், ரிஷி, ரினோ என்ற முக்கிய கதாபாத்திரங்கள் செய்யும் மாயைகளும், அண்டவெளியில், அற்புதக் கிரகங்களில் நடக்கும், திகைக்க் வைக்கும் அற்புதங்களும், படிப்போரை வியப்பில் ஆழ்த்திவிடுகிறது.