தமிழி இலக்கியம், வனத்திலுள்ள கிராமச் சொல்வழக்கு இருளர்களின் வாழ்வியல் கலாசாரம், தான் கற்ற சோதிடக்கலையின் நுட்பம், வனத்துறையில் பணி செய்தகாலத்தில் கிடைக்கப்பெற்ற அனுபவங்கள், இதற்குமேலாக, மறைந்து வாழ்வை நடத்திக் கொண்டிருக்கும் மலை வாழ் மக்களின் எண்ணங்கள், அவர்களுடைய பொறாமையின் வெளிப்படாக செயல்படும் அவதூறுச் செயல்கள், சொற்கள் போன்றவற்றின் சுருக்கமான, கருத்தாழமான வரலாற்று பொக்கிசமே இவ் 'வனம்' என்ற புதினமாகும்.