இழந்த பொருட்களை மீண்டும் பெற:
பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர் முன்செய்த மூஎயிலும்
எரித்தீர்முது குன்றமர்ந்தீர் மின்செய்த நுண்ணிடையாள் பரவையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள் அடியேன் இட்டளங் கெடயே. உம்பரும் வானவரும் உடனே நிற்க
வேயெனக்குச் செம்பொனைத் தந்தருளித் திகழும்முது குன்றமர்ந்தீர் வம்ப
ருங்குழலாள் பரவையிவள் வாடுகின்றாள் எம்பெரு மானருளீர் அடியேன் இட்
டளங்கெடவே. பத்தா பத்தர்களுக்கு அருள்செய்யும் பரம்பரனே முத்தா முக்கணனே
முதுகுன்றம் அமர்ந்தவனே மைத்தா ருத்தடங்கண் பரவையிவள் வாடாமே அத்தா
தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே!