"சில நாவல்களும் என் வாசிப்புகளும்" என்ற நாவல்கள் பற்றிய இந்த விமர்சன நூல், நாவலை எப்படி அணுகுவது என்ற புரிதலைத் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தும். அதேவேளையில் சிறுபத்திரிகை சார்ந்த இலக்கிய ஆர்வலர்களுக்கும் நாவல் பற்றிய புதிய அறிமுகத்தை உருவாக்கும். இருளில் ஒளியைப் பாய்ச்சுவது போன்றதுதான் விமர்சகனின் பணி என்ற நிலையில் பஞ்சாங்கம், தனது பல்லாண்டு இலக்கிய அனுபவத்தினால் எழுதியுள்ள இந்தக் கட்டுரைகள், காத்திரமான வாசகர்களுக்காகக் காத்திருக்கின்றன.