கொங்கு காவிரி உற்பத்தியாகும் இடமாக இருந்து, அரிய இயற்கை வளங்களுடன், சிறந்த புலவர்கள், கடையேழு வள்ளல்கள், திறமிக்க வீரர்கள், சித்தர்களைக் கொண்டுவிளங்கியதை இச்சதக நூல் விரிவாகக் கூறுகிறது. மேலும் பல அற்புதங்களும் இங்கு நிகழ்ந்த துள்ளதை அறிகிறோம். இந்நூல் முன்னுரை, சதகம் பற்றி குறிப்பு, கொங்கு மண்டல வரலாற்றைக் கூறும் கொங்கு மண்டலத்தின் சிறப்புகள், நூல், செய்யுள் முதற்குறிப்பு அகராதி என அமைந்துள்ளது.