தக்ஷப் பிரஜாபதி தனது பதின்மூன்று புத்திரிகளை கச்யப முனிவருக்குத் திருமணம் செய்வித்தான். அவர்களுள் கத்ரு,விநதை எனும் இருவரில் கத்ரு வாசுகி,ஆதிசேஷன் முதலிய ஆயிரம் பாம்புகளைப்பெற்றாள். ஆதிசேஷன் போன்ற பெருமைகளும், வீரமும் உடைய புதல்வர்கள் தனக்குப் பிறக்க அருள் புரியுமாறு கச்யபரை வேண்டினாள் விநதை. கச்யபர் விநதையின் கோரிக்கை நிறைவேற புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். வாலகில்யர்கள் நடத்திய அவ்வேள்விக்குச் சென்ற கச்யபர் அவ்வேள்வியில் உதிக்கும் புத்திரன் பறவையாக இருக்கட்டும் என அருளினார். விநதைக்கு முதல் மகனாக அருணனும், இரண்டாம் மகனாகக் கருடனும் தோன்றினார்.