எளிய முறையில் சித்த மருத்துவம்,மூலிகை மருத்துவம் மூலம் எவ்வாறு குணப்படுத்துவது, மருந்து எப்படிச் சாப்பிடுவது,என்ன முறையில் பத்தியம், பத்தியச் சாப்பாட்டில் எவை,எவை சாப்பிடலாம் எவை கவை நீக்க வேண்டும். எந்த எந்த விஷக் கடிகளுக்கு எந்தெந்த முறையில் விஷம் நீங்க வைத்தியம் செய்யலாம் என்பதைப் பற்றி இந்த நூலில் பார்ப்போம். விஷ முறி மருந்து மனிதருக்குக் கொடுத்த பிறகு மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருநாள் அதாவது 24 மணி நேரம் முழுவதும் அன்னம், தண்ணீர், ஆகாரம்,தூக்கம் கூடாது. அதன்பிறகு எப்படிப்பட்ட பத்தியம் மருந்து என்பதற்கு ஏற்ப சாப்பாடு, தண்ணீர் ஆராய்ந்து கொடுக்க வேண்டும். இப்படியாக விஷக் கடிகளுக்கு ஏற்ப எப்படி மருந்துகள் சித்த மருத்துவப்படி கொடுக்கலாம் என்பதைப் பார்ப்போம்.