தொன்மைச் சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியங்கள் வரை நெடும்பயணம் செய்து தாம் கற்றுணர்ந்தவற்றை இக்கால வாசகர்களுக்கேற்ப குறுங்கட்டுரை--------களாக அளித்திருக்கிறார். பேராசிரியர் ம.பெ.சீனிவாசன். வ.ரா., சி.சு. செல்ப்பா, துமிலன் போன்றவர்கள் இவ்வடிவத்தினை கையாண்டிருந்தாலும் இலக்கியம், பண்பாடு, நாட்டுப்புறவியல், எனப் பல்துறைச் செய்திகளைக் கற்றோர் உளந்தொட்டுப் பேசும் முயற்சியில் முன்னோடியாகத் நம் திகழ்கிறார் ம.பெ.சீ. சேவகன் என்றால் தொண்டனல்லன், வீரன் என்று ஒரு புதிய விளக்கம் தருகிறார். கம்பனுக்கு ஒரு கைவிளக்கு என்ற கட்டுரை இந்நூலுக்கு முடிமணி உரைகாரரை நினைந்துருகும் உ.வே.சா. என்ற கட்டுரை உரையாசிரியர்கள் மீது ஐயர் கொண்டிருந்த தீராக்காதலுக்கு ஒரு சான்றாவணம்.