தமிழிற் பண்டை இலக்கியங்களாய் அறியப்படுவன பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமே. இவை ஒன்பது தொகுப்புகளாய் உள்ளன. இவற்றில் இடம் பெறும் பாடல்களின் காலம் கி.மு.500 முதல் கி.பி. 100 வரை என்பர். இக்கால வரையறை பற்றி வேறுபட்ட கருத்துகளும் உண்டு. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடப்பெற்றவை.