சட்டப்பேரவையில் சோ.அழகர்சாமி
சட்டமன்ற விவாதங்களில் நிதிநிலை அறிக்கைகளின் மீதும், துறைவாரி மானியங்களின்மீதும் சோ.அழகர்சாமி அவர்களின் பேச்சுக்கள் சட்டமன்றக் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தோழர் சோ. அழகர்சாமியின் சட்டமன்ற உரையின் தொகுப்பைப் படித்தால், நிறைவேற்றப்பட்டவைகளும், நிறைவேற்றப்படாதவைகளும் நன்கு தெரியமுடியும். மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும், நிர்வாக பொது அமைப்புகளில் பணியாற்றும் இளைஞர்களுக்கு இத்தொகுப்பு பயன்படும் என்று உறுதியாக நம்புகிறேன். ஆர். நல்லகண்ணு
எத்தனை வகையான போராட்டங்கள். பல்லாண்டு, சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர், முகதாட்சண்யம் பாராமல் அமைச்சர்களை விமர்சித்தார். எதிர்த்து, கோபத்தினால் கூட, தோழர் அழகர்சாமி மீது குற்றம் கூற யாராலும் முடியவில்லை. அவர் ஆற்றிய சட்டமன்றப் பேச்சுக்களைத் தொகுத்துள்ளார் ஜீவபாரதி. அதைப் படித்தால், மக்களுக்காகப் பேசிய மக்களின் பிரதிநிதி என்பது புலப்படும். தா. பாண்டியன்