இந்தியாவில் இந்துமத மூடநம்பிக்கை எதிர்த்த சமூக செயற்பாட்டாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோர் சனாதானவாதிகளால் படுகொலை செய்யப்பட்டது போல் கிரேக்க ஆட்சியாளர்கள் சாக்ரடீஸின் கருத்து பரவுவதற்கு அஞ்சி அவரை குற்றவாளியாக்கி நீதிமன்றத்தில் நிறுத்தி, விசாரனை என்ற பெயரில் நாடகம் ஒன்றையும் நடத்தி இறுதியில் நஞ்சு கொடுத்து அருந்த வைத்து படுகொலை செய்தார்கள். சாக்ரடீஸ் படுகொலைக்கு முன் நடந்த நீதிமன்ற விசாரணையை விரிவாக அதேசமயம் எளிமையான உரையாடல் மூலம் தமிழுக்கு தந்துள்ளார் திருச்சி சிவா அவர்கள் இந்த நூலுக்கு மேலும் மகுடம் சூட்டும் விதமாக தலைவர் கலைஞரின் அணிந்துரையுடன் வெளிவருகிறது இந்த நூல்.