பக்தி இலக்கியங்களே தமிழை வளர்த்தன. இதில் வைணவ இலக்கியங்களே அதனை மேலும்
செழுமைப் படைத்தன. அவற்றில் போற்றத்தக்க தமிழ் வளத்தை மெருகேற்றியவர்கள்
நாலாயிர திவ்ய பிரபந்தம் தமிழுக்குக் தந்த பன்னிரு ஆழ்வார்களே. கவியரசு
கண்ணதாசன் கூறுவார், ” சைவ இலக்கியம் நாவல் படிப்பது போல் வைணவ இலக்கியம்
செந்தமிழைப் படிப்பது போல " என்பார். அத்தகைய செந்தமிழைப் படைத்த பன்னிரு
ஆழ்வார்களின் வரலாற்றையும் அவர்களை அடியொற்றி பயணித்த ஆசாரியார்களின்
பெருமையையும் தமிழ்ப் பணிகளை புலவர் த.கோவேந்தன் செந்தமிழ் ஆக்கத்தில்
இந்நூல் வழியே விருந்தளிக்கிறார்.