1968 ஆம் ஆண்டு கலைஞரின் 45 வது பிறந்தநாள் விழாவில், பேரறிஞர் அண்ணா கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். அந்த உரை கலைஞர் குறித்து வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாக அமைந்தது. '' தண்டவாளத்தில் தலை வைத்து படு என்று சொன்னாலும், அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள் என்று கூறினாலும் இரண்டையும் சமமாகக் கருதி ஏற்றுக்கொண்டு, தன்னுடைய திறமையை ஊர் உலகத்துக்கு பயன்படுத்தும் என் தம்பி'' என்ற அப்போது பெருமைப்படுத்தினார்.