தமிழரின் பாரம்பரியமும் பண்பாடும் கலையொழுக்கமும் காலத்தை அடையாளங்காட்டும் கண்ணியமுடையது தமிழினம். அந்தத் தமிழினத்தின் கலையழகை, பண்பாட்டு முகவரியை அடையாளங்காட்டுகின்ற வகையில் நுண்ணிதின் ஆய்ந்து அரிய உழைப்பின் பயனாக இந்நூலினை ஆக்கித் தந்துள்ளார் டாக்டர் மா. இராசமாணிக்கனார்.