உங்களிடம் சிறந்த தயாரிப்பிற்கான திட்டம் இருக்கலாம். ஒரு சிறந்த குழு இருக்கலாம். ஸ்டார்ட் அப்பிற்குத் தேவையான நிதியும் உங்களிடம் இருக்கலாம். இவை அனைத்தையும் தாண்டி உங்களது ஸ்டார்ட் அப்பின் வெற்றிக்குத் தேவையான முக்கிய விஷயம் விற்பனை.
உங்களது புதிய ஸ்டார்ட் அப்பிற்கான வாடிக்கையாளர்களைக் கண்டறிய முடியவில்லை எனில் உற்சாகம் இழந்துவிடாதீர்கள். என்ன விற்பனை செய்கிறீர்கள் என்பது மட்டும் முக்கியமல்ல. எப்படி விற்பனை செய்கிறீர்கள் என்பதும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொருட்களை வாங்க வாடிக்கையாளரை சம்மதிக்க வைக்க ஒரு சில முயற்சிகள் மேற்கொண்ட பிறகும் பலனளிக்காமல் போனால் உங்களது தொழில் முயற்சி முடிவிற்கு வந்துவிட்டது என்று கருதவேண்டாம்.