எப்படை இங்கே தோற்றாலும் இப்படை வெல்லும் நிச்சயமே
எப்படை இங்கே தோற்றாலும் இப்படை வெல்லும் சத்தியமே.
வா வா வாலிபா உன் வலிமையை உலகிற்கு காட்டவா
வா வா தூயவா நம் இளைஞர்கள் படை இது வெல்லவா.
தொடு வானம் கையிலே தொடும் நேரம் நெஞ்சிலே
நெடுந்தூரம் செல்லவே கரம் கோர்த்து வெல்லவே.
வா வா வாலிபாநம் தடைகளும் தகரட்டும் ஓடி வா.
இனி தகரங்கள் தங்கமாக மாற்றிடவா
நெஞ்சில் துணிவுள்ள கூட்டமிது
போற்றிட வா.அஞ்சும் குணம் இங்கு இல்லை விடு
தாண்டிட வா.இந்த உலகத்தின் உச்சி வரை
உயரட்டும் உன் பெயரே.எப்படை இங்கே தோற்றாலும் இப்படை வெல்லும் நிச்சயமே
எப்படை இங்கே தோற்றாலும் இப்படை வெல்லும் சத்தியமே.
எப்படை இங்கே தோற்றாலும் இப்படை வெல்லும் நிச்சயமே
எப்படை இங்கே தோற்றாலும் இப்படை வெல்லும் சத்தியமே.
வா வா வாலிபா விண்வெளியினும் உன் புகழ் பாடவா
வா வா தூயவா உன் வழியினில் தடை இல்லை ஏறி வா.