தெனாலிராமனின் புத்திசாலித்தனம்; சமயோசிதப் பேச்சு, எல்லா நாடுகளிலும் பெரியோர்கள் சொல்லும் கதைகளைச் சிறுவர்கள் கேட்டு மகிழ்வது தொன்றுதொட்டு நிகழ்ந்துவரும் நிகழ்ச்சியாகும். நல்லொழுக்கம், ஊக்கம், விடாமுயற்சி, நற்பண்புகள், அடக்கம் போன்ற பண்புகளைக் கடைப்பிடிக்க சிறுவர்களுக்குக் கதைகள் துணைபுரியும் பின்னர் அவர்கள் தாமே கதைகளைப் படித்து மகிழ்வர்.