அறிவியல், விவசாயம் , தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல் ஆகிய பல துறைகளில் தினந்தோறும் உலகமெங்கும் புதியன விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தொழில் நுட்பவல்லுநர்களால் புதுப்புது கருவிகளும் உபகரணங்களும் உருவாக்கப்பட்டு உற்பத்தியாகி அவை மனித வாழ்க்கையை எளிதாக்கிச் சுவை கூட்டுகின்றன. இவற்றைப்பற்றி ஆங்கிலத்திலுள்ள தகவல்கள் தாய்மொழி மூலமாக வாசகர்களைச் சென்றடைவது அவசியம். தமிழில் விஞ்ஞானத் தகவல்கள் வெளி வருவது மிகவும் குறைவாகவே உள்ளது. இதில் ஒரு விழிப்புணர்வும் ஆக்கமுள்ள தகவல் பரப்புதல்களும் இன்றைய உடனடித் தேவை எனலாம்.
நமது நாட்டினர் அறியவேண்டிய பல தகவல்களைத் தேர்தெடுத்து கடந்த 24 வருடங்களாக ;காலைக்கதிர்' மாதப் பத்திரிக்கையில் எழுதி வந்தவற்றைத் திரட்டி இந்தப்புத்தகத்தில் அறிவியல் ஆயிரம் ' என்ற தலைப்பில் தரப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் அறிவியல் துறைக்கு ஏற்ப்ப் புதிய புதிய நூல்களை நம்முடைய மொழியில் எழுதும்போதுதான் அவை முறையாக அனைத்து மக்களுக்கும் எளிமையாகச் சென்று சேரும். துணைவேந்தர்கள் இருவரும் இப்புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்துள்ளது இந்நூலாசிரியரின் பாக்கியம் எனலாம் .அவர்களுக்கு நன்றி.
- தி. ரா. நமசிவாயம்.