பொது அறிவு என்பது நமது அறிவை விரிய வைக்கும் ஒன்றாக்மு. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு துறைகளில் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவற்றை கோடிக்கணக்கான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவற்றை நாம் அறிய முயல்வதே பொது அறிவை வளர்த்துக் கொள்ளுதல் எனலாம். நாம் பழகும் நண்பர்கள், உறவினர் மற்றும் அலுவலக வட்டத்தில், நாம் தெரிந்திருக்கும் விஷயங்களை வைத்தே நம்மை மதிக்கிறார்கள். எனவே நாம் ஒரு சில விபரங்களை தெரிந்து கொள்ளுதல் என்பது இவற்றிற்கு மட்டுமின்றி, பலருக்கு செய்திகளைத் தரலாம், பல சுழ்நிலைகளில் பயன்பெறலாம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். '' இதையும் தெரிந்து கொள்ளுங்கள்'' பாகம் - 1 என்ற இந்த நூலில் இந்த நோக்கிற்காக 1000 விபரங்கள் கேள்வி , பதில்கள் வடிவில் தொகுத்து தரப்பட்டுள்ளன. முக்கியமாக விருதுகள், பட்டங்கள், இயக்கங்கள், அமைப்புகள், தபால்துறை, விளையாட்டு, போக்குவரத்து துறை, விஞ்ஞானம் போன்ற துறைகளில் பெரும்பான்மையான கேள்வி பதில்களும் மற்ற துறைகள் சார்ந்த விபரங்கள் ஓரளவுக்கும் தரப்பட்டுள்ளன. நல்ல தமிழ்நூல்களை வெளியிட்டு இந்திய அளவில் பதிப்பகத்துறையில் தனி முத்திரை பதித்து வரும் அறிவு பதிப்பகத்தார் முந்தைய எனது நூல்கள் போலவே இதையும் நேர்த்தியாக வடிவமைத்து வெளியிட்டுள்ளார்கள். வாங்கிப் படித்துப் பயன் பெறுக
வாழ்க வளமுடன்!