
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.39

Opening the world of stories

Arignargalin Sinthanaigal
Free shipping over ₹500
✓ Ready to ship
''சிறந்த சிந்தனைகளைக் கொண்டு உள்ளத்தை வளமாக்கும்'' என்ற பெஞ்சமின் ஃபிராங்க்ளின் அறிவுரைக் கிணங்க அடியேனும் உள்ளத்தை வளமாக்கிட சிறுவயது முதற்கொண்டே தொகுத்த அறிஞர்களின் சிந்தனையில் உதிர்த்த கருத்தாழமிக்க அறிவு முத்துக்களே இங்கு '' அறிஞர்களின் சிந்தனையில்'' என்ற நூல் வடிவில் பல்வேறு தலைப்புகளின் கீழ் எளிதாகக் கண்டறிந்திடும் வகையில் அகர வரிசையில் உங்கள் கைகளில் தவழ்கிறது.
இந்நூலில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள்யாவும் அறிஞர் களின் இதயத்திலிருந்து எழுந்தவை. வையத்தை ஆளக்கூடிய பேராற்றல் பெற்றவை. எத்துணை மனிதர்கள் உள்ளனரோ அத்துணை கருத்துக்கள் உண்டு என்பதை நமக்கு ஆணித்தரமாக உணர்த்துபவை. உலகத்தின் பல்வேறு பரிமாணங்களை நமக்கு எடுத்துரைப்பவை. இவைகளும் எல்லா நீதியுரைகளைப் போலவே ஏக்கமும் சோகமும் நிறைந்தவை. தனிமையில் விதைக்கப்பட்ட இவை ஊர் பொதுவில் சாகுபடி செய்யப்பட வேண்டியவை.
தன் சொந்த அனுபத்தால் பலன் அடைபவன் ' நிதானம்' உடையவன். பிறர் அனுபவத்தால் பலன் அடைபவன் 'விவேகம்' உடையவன் என்பார்கள். எனவே நிங்களும் விவேகம் உடையவர்களாக மாறிட இவ்வரிய நூலை வாங்கி பயனடையும்படி வேண்டுகின்றேன்.