
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.41

Arulmalai pozhiyum arputha aalayangal
Free shipping over ₹500
ஆன்மாவை ஆற்றுப்படுத்தும் ஆன்மிகத் தலங்கள்தான், உயிர்களை ஆண்டவனோடு ஐக்கியப்படுத்தி வைத்திருக்கின்றன. ஆன்மாவை சகலவிதமான தீமைகளிலிருந்தும் மீட்டெடுக்கும் இந்த ஆலயங்களே ஆத்ம சுத்திகரிப்பு நிலையங்கள். அவை ஆன்மிக சிந்தனைகளை வளர்க்கும் அற்புத ஆலயங்கள். ஆதலால்தான், இறைவன் அடியவர்களின் அன்புக்கு இணங்கி, ஆலயங்களில் வீற்றிருந்து அருள்மழை பொழிகிறான்.
இறைவன் எல்லோருக்கும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவன். ஆதலால், அறிவார்ந்த முனிவர்கள் முதல் ஓரறிவு சிற்றுயிர்கள் வரை எல்லோரும் வணங்கி வழிபட்டு உய்வுபெற்ற செய்திகளைத்தான் தலபுராணங்கள் உரைத்தன. இந்த ஆலயங்களுக்கு எல்லாம் புண்ணிய யாத்திரையாகச் சென்று, தாம் பெற்ற இறை அனுபவத்தை சக்தி விகடன் இதழில் பகிர்ந்துகொண்டார் காஷ்யபன். அந்த அனுபவத்தின் வெளிப்பாடுதான் அருள் மழை பொழியும் அற்புத ஆலயங்கள். இந்த நூலில் பெருமாள் குடிகொண்டிருக்கும் பதினான்கு திருத்தலங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அடியவருக்கும் இடமளித்த வரலாறுகள், பரம்பொருளை மனதாரப் பற்றிக் கொண்டவர்களுக்கு நிகழ்ந்த அற்புதங்கள்... என ஆன்மிகம் தோய்ந்த அனுபவ எழுத்துக்களால் நூலாசிரியர் காட்சிப்படுத்தியுள்ளார். இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஆலயங்களை தன் தூரிகை மூலம் தரிசிக்க வைக்கிறார் ஓவியர் ஜெ.பிரபாகர்.
Topics / குறியீடுகள்