வரலாற்றுக்கு எட்டக்கூடிய காலம் முதல் பெண்களும் வரலாற்றின் பகுதியாக இருந்து வருகின்றனர். பெண்ணே வரலாற்றுக்கு ஆதாரமாயுள்ளவள்; ஆயினும் அவள் வரலாறு இருளடைந்துள்ளது. அரசியர், கட்டழகியர், விலைமாதர், கடவுள் பக்தர்கள் போன்ற பெண்கள் சிலரே வரலாறுகளில் அங்கும் இங்கும் தோன்றுகின்றனர். மற்றைய பெண் சமூகத்தினரின் வாழ்க்கைச் செய்திகள் காலம் என்னும் இருளில் மறைந்து கிடக்கின்றன.