சஞ்சய் சங்கையா
சில கட்டுரைகள் நீங்கள் செய்த, செய்யும் தவறுகளை சரி செய்து கொள்வதற்கான வாய்ப்புகளை அளிக்கும்.
சில கட்டுரைகள் உங்கள் மூலைக்கு வேலை அளிக்கும்.
நமக்கிருக்கும் குறைகளை பெரிதாக நினைத்துவிட்டோம். அதெல்லாம் தவறு என்று நினைக்க வைக்கும்..
இவரைப் போல் நாமும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கும்.
மருத்துவத்தின் அபரிமிதமான வளர்ச்சி எந்த அளவுக்கு வந்திருக்கிறது என்பதை உணர்த்தும். பெரும் நோயிலிருந்து மீண்டவர்கள் வாழும் தன்னம்பிக்கை நிறைந்த வாழ்வைச் சொல்லும்.
குழந்தைகளின் உலகம் எத்தகையது என்பதையும், சமூகத்தில் அவர்களின் பங்களிப்பும், அவர்கள் எழுப்பும் கேள்விகளும் எந்த அளவுக்கு பெற்றோரிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது விளக்கும்.