
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.39

Opening the world of stories

Free shipping over ₹500
✓ Ready to ship
முதலில் இந்த நூலைக் கொஞ்சம் சிறியதாகவே எழுதினேன். இப்புத்தகத்துக்கு
வாழ்த்துரை வழங்கும் பொருட்டு நடிகர் திரு சிவகுமார் அவர்களைச்
சந்தித்தேன். அவர் தனது பல்வேறு பணிகளுக்கு மத்தியில் எனது நூலைப்
படித்திருக்கிறார். படித்தவருக்கு எனது நூலில் நான் எழுதிய பதிவுகள்
அவருக்கு மிகவும் பிடித்திருக்கவே இதனை இன்னும் கொஞ்சம் விரிவான பதிவாகவே
எழுதலாமே என்றார். அதற்காக நான் உங்களுக்கு ஏ.பி.என் அவர்களுடன்
திரைத்துறையில் தொடர்புடைய அவருடைய உதவி இயக்குனரும் அவரது நிழல் போன்ற
திரு எஸ்.ஆர்.தசரதன் அவர்களையும், மாஸ்டர் பிரபாகர், திருமதி
குட்டி.பத்மினி, ஏ.பி.என். அவர்களின் அண்ணன் மகனும் அவரது திரைப்பட
நிறுவனத்தின் நிர்வாக மேலாளராக பணிபுரிந்த திரு.முருகு எனப் பலரையும்
அறிமுகம் செய்து வைத்தார். அத்துடன் இயக்குனரும் திரைப்பட தயாரிப்பாளரும்
நல்ல நடிகருமான திரு.கலைஞானம், ஏ.பி.என்.அவர்களின் அருந்தவப்புதல்வி
திருமதி.விஜயலெட்சுமியையும் அவரது புதல்வர் திரு.பரமசிவம் அவர்களையும்
எனக்கு அறிமுகம் செய்தார். எனவேதான் இந்த நூல் ஒரு புதுப்பொலிவு பெற்றது
என்றால் அது மிகையாகாது. அதற்கு திரு.சிவகுமார் அவர்கள் இயக்குனர்
ஏ.பி.என்.அவர்கள் மீது கொண்ட அளவிடற்கரிய அன்பே அடிப்படை என்று சொல்லலாம்.
எனவே இந்த நூல் செழுமைப்பட, சிறப்படைய, பொலிவுபெற உதவிய திரு.சிவகுமார்
அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த, இதயம் கனிந்த நன்றியை
உரித்தாக்குகிறேன்.