இச்சிறு புத்தகத்தில் கூட்டுறவின் எல்லாத் துறைகளும் கூறப்படவில்லை. கிராமக் கூட்டுறவு என்ற தலைப்புக்கு இணங்க இந்த இயக்கம் எந்த எந்த விதங்களில் கிராம மக்களுக்குப் பயன் படக்கூடும், தற்காலக் கிராமச் சங்கங்களில் உள்ள குறைகள் எவை அவற்றை நிவர்த்தி செய்யும் உபாயங்கள் யாவை என்பன போன்றவை மட்டும் விளக்கமாக இதிற் கூறப்படுகின்றன.