இன்றைய நாளில் பள்ளி, கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்து விட்டு, வெளியே வந்து பின்னர் சிறிது காலத்தில் திருமணமாகி இல்லற வாழ்க்கையை ஏற்கும் பெண்களுக்கு குடும்பப் பொருப்பு மிகவும் சிரமமான ஒன்றுதான் என்பதில் ஐயமில்லை. சமையல் செய்வதிலிருந்து, குடும்ப நிர்வாகத்தின் ஒவ்வொரு சிறுசிறு பிரச்னையிலும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றைத் தொகுத்து, இந்நூலில் தந்துள்ளார் ஆசிரியர்.