பிறந்த நாள் என்பது, எல்லோருடைய நெஞ்சிலும் நீங்காமல் இடம் பெற்றிருக்கும் சிறப்பான நாள். இந்தப் பூவுலகில் தோன்றிய நாள் பிறந்த நாள் என்பதால் அதற்கு அளப்பரிய மகத்துவம் உண்டு. எல்லா விழாக்களையும் விடப் பிறந்த நாள் விழாதான் பிஞ்சு நெஞ்சங்களைப் பெரிதும் மகிழ்விக்கும் நாள் பிறந்த நாளைக் கொண்டாடுவதும். கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் பிள்ளைகளுக்கு மிகவும் உற்சாகமான செயல்கள். ஏழு நாள்களுமே பலரின் பிறந்த நாள்களாக இருப்பதால் எல்லா நாள்களுமே மகிழ்ச்சியான நாள்களாகக் கொள்ளும் வண்ணம் பிள்ளைகளை மற்றவர்களுக்கு வாழ்த்துச் சொல்லப் பழக்க வேண்டும். மகிழ்ச்சியோடு மற்றவர்களை வாழ்த்தும்போதுதான் அன்பு நம் நெஞ்சில் ஊற்றெடுக்கும்.