என் இனிய நண்பர்களே வணக்கம்.
படித்த புத்தகங்களும்.பாதித்த அனுபவங்களும் என்னை ஒரு வித்தயாசமான மனிதனாகவே வளர்த்து வந்துருக்கின்றன.சமுகத்தின் எந்தத்தீமைகளோடும் உடன்பாடு காண என் உள்ளம் மறுக்கிறது
பொய்மையும் போலித்தனமும் மிகுந்த மனிதர்களைச்சந்திக்கும் போதெல்லாம் அவர்கள்ச்சாய்ந்து விட வேண்டும் போல் ஓரு தார்மீக ஆவேசம் என் இதயக் கபாடங்களைத்தகர்துக்கொண்டு வெளிக்கிளம்புகிறது
என் வாழ்காலச்சமூகம் எல்லாச்துறைகளிரும் போலிகளுக்கு மட்டும் பொன்னாடை போர்த்தி வருவதைப் பொறுக்க முடியாமல் பல நேரங்களில் என் இருதயம் இரணமாகி விடுகிறது
இங்கே சகல மட்டங்களிலும் ஆட்சி நடத்தும் அரசியலும் சினிமாவும் அற்பபத்தனங்களுக்கு மட்டுமே அரச மகுடம் சூட்டுக்கொண்டு இருக்கின்றன
அரசியல்...நல்லவர்கள் நனைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு அசிக்கப்பட்டுக்கிடக்கிறது.சினிமா ...வன்முறை வெறியைத் தவிர வேறு எதுவமே வாழ்கையில்லை என்று சாதிக்க மூயல்கிறது