பெரிய புராணக் கதைகள் என்னும் இந்நூல் சைவத்தின் பெருமையை நிலைநாட்டிய அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றினைக் கதையாக எடுத்துச் சொல்வதாகும். புராணம் என்பதனாலோ அல்லது கதைகள் என்பதாலோ இதில் இடம்பெற்றுள்ள நாயன்மார்கள் வரலாறுகள் நம்பத்தகுந்தன அல்லவோ என்று யாரும் எண்ணிட வேண்டாம். தமிழ்த் தென்றல் திரு.வி. க. அவர்கள் குறிப்பிட்டது போல பெரிய புராணம்,பெளராணிகத்தை வித்தாக்க் கொண்டு எழுந்த நூல் அன்று.