சித்தர் நூல்களிலே தேர்ந்தவர்கள் இந்நூலிலே பல குறைகளைக் காணலாம். சித்தர் நூல்களிலே, நமக்கு ஆராய்ச்சியோ, அனுபவமோ இல்லை. ஆயினும், தெரிந்ததை வெளியிட்டால், இதில் தவறுகள் இருக்கின்றன என்பதை விளக்கவாவது, உண்மையான சித்தர் தத்துவ விளக்க நூல் ஒன்று தோன்றாதா? சித்தர்களின் தத்துவம் அறிந்தவர்கள் எழுத முன்வர மாட்டார்களா? என்ற ஆசைதான் இந்நூல் எழுதுவதற்கு முதன்மையான தூண்டுதலாகும்.