குடும்ப சூத்திரம், இதில் வாத்ஸ்யாயனரின் காம சூத்திரத்தையும் தமிழில் ஆதிசங்கரர் எழுதியதாக கூறப்படும் மதனநூல் ஆகிய இரண்டிலும் உள்ள விஷயங்களில் இல்லற வாழ்க்கைக்கு தேவையான சிலவற்றை மட்டும் எடுத்து தொடுத்திருக்கிரார். கவிஞரின் கவிதை நடையில் அவர் கட்டவிழ்க்கும் கட்டில் ரகசியங்கள் படிக்கும் எவரையும் ஒரு நொடி கண்கள் மூடி கனவு காண வைக்கும். கொடிய காம நிலை பகுதிகளை தவிர்த்து கன்னியம் காத்துள்ளார். திருமணமான, ஆகவேண்டிய அனைவரும் தவறாமல் ஒருமுறையாவது படிக்க வேண்டியது அவசியம்