" “பழங்காலத் தமிழர் வாணிகம்” என்ற இந்நூலை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளார். பல நூறு நூல்களில் கற்றதையெல்லாம் கையாண்டு ஆய்வு நோக்கில் பழங்காலத்தில் தமிழர் வாணிகம் எவ்வாறு இருந்தது என்பதை விளக்கிக் காட்டுகிறார்.
தமிழ் நாட்டில் என்னென்ன பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன, அவை எந்தெந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன, தமிழர்கள் எந்தெந்த நாடுகளுக்குச் சென்று வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பவையெல்லாம் புள்ளி விவரங்களாக இந்நூலில் விளக்கப்படுகிறது. தமிழர்கள் பழங்காலத்தில் சோம்பிக்கிடந்ததில்லை என்ற உண்மை இந்நூலின் மூலம் நன்கு விளங்கும்.
"