தலைப்பை பார்த்தவுடனே, 'நான் இதெல்லாம் வடிவேலு - பார்த்திபன் காமெடிலேயே பார்த்துட்டேனு அப்படியே போயிறாதீங்க…!' இது அது இல்லைங்க, கொஞ்ம் உள்ள போயி படிச்சுப் பாருங்க...இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களுக்கு கோடி எல்லாம் வெறும் தெருக்கோடி தூரம்தான். 20 ஆண்டுகளுக்கு முன் ரூ.5,000 சம்பாதித்தாலே அது பெரிய விஷயம். இப்போதெல்லாம் 20 வயது பசங்களுக்கு அந்தப் பணமெல்லாம் சரவ்சாதாரணம். இப்படி இருக்க, 30 வயதுக்குள் ஒருவர் கோடீஸ்வரராக முடியுமா? சில இளைஞர்களுக்கு அதுதான் அவர்கள் வாழ்க்கையின் முக்கியச் சவால். அதே எண்ணத்திலேயே முழு மூச்சோடு செயல்பட்டு அந்தச் சவாலில் வெற்றி பெறவும் துடிப்பார்கள். இந்த உலகில் பணத்துக்கு மட்டும் எப்போதுமே பற்றாக்குறை வருவதில்லை. பணத்தைப் பற்றிய நம் எண்ணங்களுக்குத்தான் பற்றாக்குறை.
லட்சக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து கல்லூரிகளில் படிக்கும் போதே, ரூ.10,000 வரை பகுதி நேர வேலையில் சம்பாதிக்க வழி உள்ள இந்தக் காலத்தில், 30 வயதுக்குள் எவரும் கோடீஸ்வரன் ஆவதும் நிச்சயம் சாத்தியமே! அதற்கான சில வழிகளும் உள்ளன என்கிறார்கள் இந்த துறையின் நிபுணர்கள். அவற்றைப் பற்றிப் பார்ப்போமா.