பயனுள்ளவகையில் பொழுதைக்கழித்தல் என்றால், மூன்று விஷயங்கள் நம் கவனத்திற்கு வரும். அதாவது பொழுதுபோக்கிற்காக நாம் எடுத்துக்கொள்ளும் வேலை (1) நமக்கு மனநிறைவையும் அறிவு வளர்ச்சியையும் தரவேண்டும் (2) நாம் வாழும் சமுதாயத்திற்குப் பயன் தருவதாய் அமையவேண்டும் (3) நமக்கு, கொஞ்சமேனும் பணவரவைத் தருவதாய் அது இருக்க வேண்டும்.
இன்றைக்குள்ள சூழ்நிலையில் இந்த மூன்று வழிமுறைகளையும், ஒருங்கே தருவது கழிவுப்பொருட்களிலிருந்து பயனுள்ள பொருட்களை மீட்பதாகும்.இதனை ஆங்கிலத்தில் ரீசைக்ளிங் என்பர்.வீட்டுக்கழிவுப்பொருட்களிலிருந்து, வாணிப, மற்றும் தொழிற்கூடக்கழிவு வரை - பல்வேறுவிதமானக்கழிவுகள் ஒவ்வொரு நாளும் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கின்றன.
இவற்றை நாம் ரீசைக்ளிங் செய்யவேண்டும் என்றால் பலதகவல்கள் தேவைப்படுகின்றன.