தமிழ் இலக்கியம் ஏறத்தாழ இருபத்தைந்து நூற்றாண்டுகளின் வரலாற்றினை உடையது. தென்னிந்தியாவின் பிற திராவிட மொழிகளின் இலக்கியங்கள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றியவை. ஆகையால் அதற்கு முன்னர் பன்னிரண்டு நூற்றாண்டு காலத் தமிழ் இலக்கியம் தனியே வளர்ந்து வந்தது. சங்க காலத்துக்கும் கி.பி 7-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சமஸ்கிருதம் கற்ற அறிஞர்களின் உறவு தமிழகத்தில் இருந்திருக்கிறது