உலக நாடுகள் எங்கும் 'குழந்தை இலக்கியம்' மிகவும் முக்கியமானது. வளரும் குழந்தைகளுக்கு வயிற்றுப்பசிக்கு உணவு தருகிறோம். ஆனாலும் நல்லபடி உடல் நலம் பெறச் சத்துணவு பானங்கள் ' வைட்டமின் மாத்திரைகள்' சேர்க்கிறோம். அதைப்போலவே, அன்பும் பண்பும், தீர்க்கசிந்தனையும் ஒரு சேர வளரத்துணைசெய்பவை. ' குழந்தை இலக்கியங்கள்' குழந்தைகள் கதைகேட்பதில் ஆர்வம்கொண்டவர்கள் ,ஆடிப்பாடி அபிநயம் செய்வதிலும் ஈடுபாடுள்ளவர்கள் குழந்தைகளின் மனவளர்ச்சி ஓங்க சிறுவர் பாடல்களும் சிறுவர் கதைகளும் சிறுவர் நாடகங்களும் தான் என்றும் துணை செய்யும்.
கிராமங்களில் குழந்தைகள் மாலையில் கூடி மகிழ்ந்திருக்கும் அப்போது பாடும் பாடல்கள் ஆயுள் முழுவதும் மனதில் நிலைத்திருக்கும் உரையாடுவதும் விளையாடுவதும் நெஞ்சத்தில் நிலைத்திருக்கும். சிறுவர் நாடகங்கள், நடிப்போர்க்கும், பார்ப்போர்க்கும் படிப்போர்க்கும் நல்வழிகாட்டும் நல்ல கருத்துகள் நற்பண்புகளை வளர்க்கும் , அம்மா அப்பா, செல்லப்பிள்ளை இந்த நன்னோக்குடன் படைக்கப்பட்டது. உரையாடல்களை உள்ளத்தை தொடும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் படிப்பினை ஊட்டும் நாடகம் . படித்துப் பயன் பெறுவீர்.
- பதிப்பகத்தார்.