ஆரோக்கியமான விவசாயம் ஆரோக்கியமான வாழ்வு தரும். இயற்கை வேளாண்மையில் நன்மைகள் நாடிவருகின்றன. செயற்கை வேளாண்மையில் தீமைகள் சேடிவருகின்றன. இயற்கை வழி வேளாண்மையில் உற்பத்தியை உயர்த்தும் போது பொருளாதாரப் புரட்சி உருவாகிறது. இந்திய மண்ணுக்கு நாட்டுக் கலப்பை உழவே ஏற்றது. இந்தியாவில் காளை சக்திதான் முக்கியம். வெள்ளைக்காரர்கள் கற்றுத் தந்த குதிரை சக்தி நமக்குத் தேவையற்றது. இவைபோன்ற பல அரிய கருத்துகளை இந்நூல் வலியுறுத்துகிறது.
குறைந்த நீரில் கூடுதல் மகசூல் பெறும் வழிகள் உயர்வன இயற்கை உரங்கள். பயிர்பாதுகாப்பில் புதிய முயற்சிகள், வேளாண்மை, மேன்மை பெறும் வழிகள், விஞ்ஞானிகளின் வழிகாட்டுதல்கள், பல வகையான மரங்கள் வளர்ப்பு முறைகள் -லாபங்கள் ஆகியவைபற்றி நூலாசிரியர் இயற்கை விஞ்ஞானி ஆர். எஸ் நாராயணன் அவர்கள் 44 கட்டுரைகளில் விளக்குகிறார்.
ஆர். எஸ் நாராயணன்.