"வாழ்வு தரும் மரங்கள்" என்னும் இந்நூலில் அரசமரம், ஆலமரம், நாவல் மரம், பலா மரம், வேம்பு, நெல்லி. பனை, பனை, கொய்யா, மூங்கி உள்ளிட்ட 78 வகையானமரங்களின் பயன்பாடுகளை ஆய்வு செய்து, மருத்துவ ரீதியாக விளக்குகிறார். குடல்புண், மூலப்புன், மேகப்புண் வாய்ப்புண் போன்ற புண்களை ஆறச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும், விந்து விருத்தி செய்ய, பாலுணர்வு தூண்டப்பட, பாலியல் நோய்களைக் குணப்படுத்த, மலட்டுத்தனம் நீங்க,பிரசவம் எளிதாக அமைய, தாய்ப்பால் தாராளமாகச்சுரக்க எதை எதை என்னென்ன பக்குவத்தில் உட்கொள்ள வேண்டும் என்பவற்றை எடுத்துரைக்கிறார். மாதவிடாய் வயிற்று வலிக்கு நிவாரணம் பெற, கர்ப்பம் கலையாதிருக்க, சிறுநீரகத்தில் கல்லடைப்பைப் போக்க, கட்டிகள் உடைய மரங்கள் பயன்படுவதை விளக்குகிறார்.