'முன்னேற மூன்றே சொற்கள்' அந்த சொற்கள் என்னவாக இருக்கும்ழ தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழுவது இயற்கை.
இந்த தலைப்பைத் தேர்ந்தெடுப்பதற்குப் பல மாதங்கள் ஆயின. இதைத்த தெர்ந்தெடுக்கக் காரணம் நமது மக்களின் காதிலே அந்த மூன்று சொற்களையும் போட்டு வைப்போம். ஏறும் போது ஏறட்டும் உரைக்கும் போது உணரட்டும் என்பதால்தான்.
அந்த மூன்று சொற்கள்தாம் என்ன?
அவற்றைத் தெரிந்துகொள்வதற்குமுன் அந்த மூன்று சொற்களையும் வேதவாக்காக எடுத்துக்கொண்டு அவற்றைப் பின்பற்றிச் செயல்படுகின்றவர்கள் நிச்சயமாக முன்னேறிவிடலாம் என்பதை உறுதியாகக் கூற விரும்புகிறேன்.