'தன்னை அறிந்தபின் பிறிதொருதெய்வமில்லை' என்ற உண்மையின் உள்ளொலியின் வெளிப்பாடே பட்டினத்தார் பாடல்கள். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் வெல்லற்கரிய நல்ல மொழிகளின் வெள்ளக்காடாய் பரந்துவிரிந்தன அவர் சிந்தனைகள்.
தானதரும்ம் செய்து, பரிவு, பச்சாதாபம், தயை, அன்ப, அனைய நல்லுணர்வுகளை வார்த்து, வாழ்வாங்கு வாழ வலியுறுத்துகிறார். இவைய ஏமக்கள் பால் அவர் வைத்த அன்பின் அடையாளம்.
அத்தகையோரின் வாழ்வை எளிய நடையில் அனைவரும் படிக்கும் வகையில் அவர்தம் வாழ்க்கையையும், சிந்தனைகளையும், உடன் அவர் தம் முழுப்பாடலையும் ஜெகாத வழங்கியிருக்கிறார்.