வேதங்கள் நான்கு வகைப்படும் என்பதை நாமறிவோம். அவை ரூக், யஜீர், சாமம், அதிர்வனம் என்பவையாகும். வேதங்கள் மந்திர ரூபமாக உள்ளன. உபநிடதங்களிலும் மந்திரங்கள் சொல்லப்பட்டுள்ளன. 'சந்தஸ்' என்னும் நூல் வேத மந்திரங்களைப் பலவித சந்தங்களுடன் ஒதுதற்கு வழிகாட்டுகிறது.
எல்லா மந்திரங்களுக்கும் அடிப்படை பிரணவ மந்திரமாகும். ஓங்காரத்தில் அனைத்தும் அடங்கி விடுகிறது. ''ஓம்'' என்ற ஒலியுடன் வேத மந்திரம் சொல்லப்படுவதால் அது ''உத்கீதம்'' எனப்படும்.