இறைவனது புகழைப் பற்றிக்கூறும் நூல்களை எழுதுவதற்கும், வெளியிடுவதற்கும் இறையருள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இந்த சிவ ஸஹஸ்ர நாமத்தை உரையுடன் எழுதி முடிக்க இரண்டாண்டுகள் கழுந்துவிட்டன. தற்போது இதற்கென எங்கும் உரை நூல்கள் இல்லை. அந்தக் குறையை நிறைவு செய்வதற்காக இந்நூல் வெளிவருகிறது. இதைத் தொடர்ந்து ஸ்ரீ லெட்சுமி ஸஹஸ்ஹரநாம நூல்களும் தொடர்ந்து வெளிவர உள்ளன. இந்த நல்ல வாய்ப்பை எனக்களித்த கற்பகம் புத்தகாலயத்தாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.