தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் துணை வேந்தராக இருந்த காலகட்டமான 1972 ஆம் ஆண்டு, நா. வானமாமலையால் தொகுக்கப்பட்ட இக்கூத்துப் பாடலை மதுரைப் பல்கலைக்கழகம் நாட்டுப்பாடல் வெளியீடு நான்காவதாக வெளியிட்டது. 1961 இல் வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடலைத் தொடர்ந்து மறு ஆண்டே இந்நூல் வெளியானது. கோவில்பட்டி தாலுக்காவிலும், இராமநாதபுரம் தென்பகுதிகளிலும் கூத்துப் பாடல்கள் அனைத்தையும் சேகரித்துக் 'கட்டபொம்மு கூத்து' என்ற தலைப்பில் தனி நூலாகத் தந்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடலில் இல்லாத செய்திகளை இந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.