தமிழ் இலக்கிய, சமயமேடைகளில் தோன்றுவது, இடம் பிடிப்பது, இடத்தைத் தக்கவைத்துக் கொள்வது, மேடையில் இருந்து இறங்கிய் பிறகும் கேட்டவர்கள் நினைவில் நிற்பது வாழ்வில் வழிகாட்டியாய் வளர்வது ஒரு பெரிய விஷயம்.
வெறும் சாமர்த்தியங்களையும் தாண்டி தன்னையும் வளர்த்து கேட்பவர்களையும் வளர்க்கும் பேச்சாளர்கள் மிகமிகக் குறைவு. ஆனால், அந்தக் குறைந்த எண்ணிக்கையாளர்களின் கூடாரத்துள் நுழையத் துடிக்கும் பயிற்சியும் முயற்சியும் மிக்க அடுத்த தலை முறை பேச்சாளர்களில் ஒருவர் திருமதி சுமதி.